“சும்மா இருந்தாலும் கிடைக்கும்”…. விவசாயிகளுக்கு ரூ.7000 நிதி…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…….!!!!

நாட்டிலுள்ள விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் அனைவருக்கும் உதவும் வகையிலும் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு pm-kisan உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதனை போல ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு திட்டத்தை அரியானா மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது.

விவசாயத்திற்கான தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தில் இந்த வருடத்திற்கான பயிர் பல்வகைப்படுத்தப்படும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. “மேரா பாணி- மேரி விரசாத் யோஜனா”என்ற இந்தத் திட்டத்தின் கீழ் நெல்லுக்குப் பதிலாக நீர் நுகர்வு குறைவாக விதைக்கும் விவசாயிக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் அந்த நிலத்தை காலி  செய்தாலும் கூட ஏக்கருக்கு 7 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் நெல்லுக்கு ஈடாக பருத்தி, நிலவேம்பு, துவரை, சோயாபீன், உளுந்து, மக்காச்சோளம், எள், நிலக்கடலை, தோட்டக்கலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் இந்த நிதி உதவியை பெறுவதற்கு இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்வது மிகவும் அவசியம்.

இதனை பயன்படுத்திக் கொள்ள மேரி ஃபஸல் மேரா பயோரா போர்ட்டலில் மேரா பானி மேரி விராசத் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதன்படி மே 15ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். வேர் ஆர் வளர்ச்சி அலுவலர்கள் இதனை சரிபார்ப்பு செய்வார்கள். கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளும் இந்த ஆண்டு இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *