சுப நிகழ்ச்சிக்கு சென்ற மகள்…. பெற்ற தாய்க்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதிகள் அவ்வையார் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அவ்வையார் தனது மூத்த மகளான பார்வதி என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு பார்வதி தனது குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவ்வையார் மாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது திடீரென தவறி   கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவ்வையார் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவ்வையாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *