கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளியே சென்ற நிலையில், செம்மேடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுபஸ்ரீ மரணத்தை வைத்து சிலர் அவதூறு பரப்புவதாக கூறி ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, சுபஸ்ரீயின் மரணம் துரதிஷ்டவசமானது. இது வேதனையை தருகிறது. சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் போலீஸிடம் கொடுத்துள்ளோம். இந்த விவகாரத்தை சிலர் சுய லாபத்திற்காக அரசியலாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். எனவே அவதூறு பரப்புபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.