“சுபநிகழ்ச்சிகள், இறப்பு வீடுகளில் மக்கள் கூட தடை”….. மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுப நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விதித்தித்து வருகிறார்கள். அந்தவகையில் வேலூர் மாவட்டத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமண மண்டபங்களில் 100 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை மற்ற மாவட்டங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *