சுட்டெரிக்கும் வெயில் தாங்க முடியல… முதியவருக்கு நடந்த துயரம்… போலீஸ் விசாரணை..!!

திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா வணிக வளாகத்தில் பூ சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த பூ சந்தைக்கு விற்பனைக்காக ஏராளமான விவசாயிகள் பூக்களைக் கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இதனை வாங்க வியாபாரிகளும் வருகை தருகின்றனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இன்று காலை 11 மணியளவில் மார்க்கெட்டுக்கு பூ வாங்க வந்துள்ளார். அவர் மிகுந்த சோர்வுடன் வெயிலில் தாக்கம் தாங்க முடியாமல் நடந்து வந்துள்ளார். அங்கு படியேறி மேலே வந்தவர் கொஞ்ச நேரத்தில் தூணில் சாய்ந்து மயங்கிய நிலையில் அமர்ந்திருந்தார். அதனைக் கண்ட தொழிலாளர்கள் முதியவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அவர் எழும்பவில்லை. அதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து நகர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எந்த ஊர் ? அவர் யார் ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்தால் முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.