
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் பல்வேறு வீடியோக்கள் ரசிக்க வைப்பதாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் வீடியோ என்றால் சொல்லவா வேண்டும். குழந்தைகள் என்ன செய்தாலும் ரசிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் வைரல் ஆகிறது. அதாவது ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளிவந்த தேவாரா திரைப்படத்தில் இடம்பெற்ற சுட்டமல்லே பாடலுக்கு பள்ளி குழந்தைகள் ஆண்டு விழாவுக்கு நடனம் ஆடுவதற்காக ஒத்திகை பார்த்துள்ளனர்.
அப்போது ஒரு சிறுவன் ஜூனியர் என்டிஆர் போன்று உடலை வளைத்து நிலைத்து அற்புதமாக நடனம் ஆடுகிறான். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வரும் நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகள் என்பது குவிந்து வருகிறது.
View this post on Instagram