சுடுகாட்டில் கிடந்த வாலிபரின் சலடம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. திருச்சியில் பரபரப்பு…!!

வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார்கோட்டை சோமசுந்தர நகர் அருகே இருக்கும் சுடுகாட்டு பகுதியில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் அரியமங்கலம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த ரிஷி(19) என்பது தெரியவந்துள்ளது.

இவர் எஸ்.ஐ.டி பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரிஷி வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களோடு இணைந்து சுடுகாட்டு பகுதியில் வைத்து ரிஷி மது அருந்தியது தெரியவந்தது. எனவே நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ரிஷி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.