தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று  பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சேவைகளின் கீழ் 12 சுகாதார அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு மொத்த 593 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்  பிப்ரவரி 13ஆம் தேதி தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வுக்கு சென்னையில் மட்டுமே மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தேர்வை 327 ஆண்களும், 266 பெண்களும் எழுத உள்ளதாக டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது.