சுகாதாரத் துறை அறிவுறுத்தலை மீறி தொடர்ந்த குடில் சுற்றுலா…. 200 குழந்தைகளுக்கும் மேல் தொற்று உறுதி…!!

அமெரிக்காவில் குடில் சுற்றுலா சென்றிருந்த 200-க்கும் மேலான குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜார்ஜியாவில் இரவு நேர குடில் சுற்றுலா சென்றிருந்த 200-க்கும் மேலான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகிருப்பதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி குடில் சுற்றுலாவில் பங்கேற்ற இளம்வயது ஊழியர்கள் சிலர், உடல் வெப்பநிலையில் மாறுபாடு இருந்த காரணத்தால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஜூன் 24ஆம் தேதி கொரோனா உறுதியாகியது.

இதனை தொடர்ந்து குடில் சுற்றுலாவில் இருந்தவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. இருந்தாலும் சுற்றுலா தொடர்ந்து மூன்று நாட்கள் செயல்படுத்தப்பட்டது. அந்த சுற்றுலாவில் 600 பேர் பங்கேற்ற நிலையில், ஒரு குடிலில் 26 பேர் தங்கியுள்ளனர். தற்போது அவர்களில் 260 பேருக்கு கோரோனோ உறுதியாகியிருக்கிறது. அதில் பெரும்பாலானோர் 6-10 வயதுக்குள்ளான குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *