சீமான் பாலியல் குற்றவாளி…. அவருடைய இடம் சிறைச்சாலை…. ஜோதிமணி காட்டம்….!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் குற்றவாளி என்றும் அவர் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.

அண்மையில் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த சீமான், ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? அவர் ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்து உள்ளார். ராகுல் காந்தி தனது தந்தையை கொலை செய்த குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க என பதிலளித்தார்.

இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்விட்டரில், சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது என அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *