தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து தம்பி தம்பி என்று கூறிய சீமான் அவருக்கு தன்னுடைய முழு ஆதரவையும் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் விஜயின் முதல் மாநாடு முடிவடைந்து அவருடைய கொள்கைகள் வெளியான பிறகு சீமான் விஜயை விமர்சிக்க தொடங்கிவிட்டார். அதாவது அவருடைய கட்சி கொள்கைகளில் உடன்பாடு இல்லாததால் சீமான் விமர்சித்தார். குறிப்பாக அழுகிய கூமுட்டை, லாரியில் அடிபட்டு செத்து விடுவார் போன்ற மோசமான வார்த்தைகளால் விமர்சனங்களை வைத்தார். இருப்பினும் விஜய் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சிக்க வேண்டாம் எனவே தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த நிலையில் விஜய் சீமான் பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காத நிலையில் அவரை தன் சகோதரர் என்று கூறியதோடு தற்போது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். இதன் காரணமாக 2026 ஆம் ஆண்டு தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு தற்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாரா என்ற கேள்வி எழுந்தாலும் முன்னதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்ததால் ‌ அதன் அடிப்படையில் தான் தற்போது சீமானுக்கு வாழ்த்துக்களை கூறியதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது சீமான் பல்வேறு விமர்சனங்களை செய்து இருந்தாலும் விஜய் அவருக்கு வாழ்த்து கூறியது ரசிகர்கள் மத்தியிலும் தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியிலும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது