தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற போது விஜய் கொள்கைகளை அறிவித்தார். அவர் திராவிடமும் தேசியமும் தன்னுடைய இரு கண்கள் என்று கூறினார். விஜய் கொள்கைகளை அறிவித்தது முதல் சீமான் அவரை விமர்சித்து வருகிறார். அதற்கு முன்பு வரை ஆதரவு கொடுத்த சீமான் கொள்கைகளை அறிவித்த பிறகு திமுகவோடு ஒத்துப்போவதாகவும் அது கொள்கைகளே கிடையாது எனவும் அழுகிய கூமுட்டை எனவும் ‌ இப்படி அந்தப் பக்கமும் இல்லாமல் இந்த பக்கமும் இல்லாமல் நடுவில் நின்றால் லாரி அடிபட்டு செத்து விடுவாய் என்று கூறினார்.

இதே போன்று தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் விஜயின் கட்சி கொள்கைகளை விமர்சித்துள்ளார். அதாவது திராவிட சித்தாந்தங்களை மட்டுமே விஜய் பேசி வருவதாகவும் தனியாக எந்த ஒரு கருத்தையும் அவர் மக்களுக்கு என சொல்லவில்லை எனவும் கூறினார்.

அதன்பிறகு நிகழ்ச்சி ஒன்றும் கலந்து கொண்ட அண்ணாமலை, விஜயின் அரசியல் வருகையை ஆதரிப்பதாக கூறிய நிலையில் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். அதே சமயத்தில் நடிகர் விஜய் திராவிட சித்தாந்தங்களை மட்டும் தான் பேசுகிறார் எனவும் புதிதாக எந்த ஒரு விஷயங்களையும் கூறவில்லை எனவும் அக்டோபர் மாதத்தில் எத்தனை முறை அவர் வெளியே வந்துள்ளார் எனவும் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பவர் 365 நாட்களும் மக்களுக்காக களத்தில் நிற்க வேண்டும் எனவும் கூறினார்.

அதன் பிறகு முதல் மாநாட்டில் விஜய் நிறைய பேசியுள்ளதாகவும் அதற்கு எங்கள் கட்சித் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர் எனவும் இனிவரும் நாட்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அது பற்றி பேசுவேன் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அண்ணாமலை நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.

அவர் பேசும்போது, இன்னைக்கு புதிதாக வந்தவங்க எத பத்தியும் பேசாம எதுலையும் மாத்தாமல் நடுவுல சுத்துறாங்க. இன்னைக்கு வரவங்கள பார்த்தா அது புது பாலிடிக்ஸ். இந்த வடிவேலு சொல்ற மாதிரி தென்னை மரத்துல ஒரு கால் பனைமரத்துல ஒரு கால். இந்த சித்தாந்தத்தில் கொஞ்சம் அந்த சித்தாந்தத்தில் கொஞ்சம். இந்த தலைவர் போட்டோவை இங்க போடு அந்த தலைவர் போட்டோவ அங்க போடு. மொத்தமா 10 தலைவர் போட்டோவை போட்டுட்டா நம்மளை யாரும் கேட்க மாட்டாங்க. அவங்களையே கூப்பிட்டு கேளுங்க.

அது எப்படிங்க ரச சாதத்தையும் சாம்பார் சாதத்தையும் கலந்து வச்சுட்டு அதுல தயிர் சாதத்தையும் கலந்து வச்சுட்டு சாப்பிடுங்கன்னு சொன்னா எப்படி சாப்பிடுவாங்க. ஒன்னு ரசம் சாதம்னு சொல்லலாம் அல்லது தயிர் சாதம்னு சொல்லலாம் இல்லனா சாம்பார் சாதம்னு சொல்லலாம். மேலும் அப்படி இல்லாமல் மூணையும் சேர்த்து வச்சு சாப்பிடுங்கன்னு சொன்னா எப்படி சாப்பிட முடியும் என்று கூறுகிறார்.

இதற்கு நடிகர் விஜயின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வாழை இலை விருந்தை அனுப்பியுள்ளனர். மேலும் நாங்கள் வாழை இலை போட்டு விருந்தோடு சாப்பிடுவோம் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் மதவாத மற்றும் பிளவுவாத அரசியல் செய்யும் பாஜகவுக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் களத்தில் சந்திப்போம் என்னும் பதிலடி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ‌