வேங்கைவயல் கிராமத்தில் மருத்துவ முகாம் நிகழ்வினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, காரைக்குடி பகுதியில் ஒருவர் தன் இல்லத்தின் அருகே வைத்திருந்த பெரியார் சிலையை, அதுவும் தமிழக அரசின் எல்லைக்குள் பெரியாரின் சிலை அப்புறப்படுத்தப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது.

மேலும் அவர் கூறியதாவது, வேங்கைவயல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விட பெரியார், திராவிடர் எதிர்ப்புதான் சீமானிடம் மேலோங்கி உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, என்னை சீமான் விமர்சனம் செய்துள்ளது என் மீதான அவரது காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. நான் அனைத்து சமூக மக்களின் பிரச்சினைகளுக்காகவும் களத்தில் நின்று போராடி வருகிறேன் என்று கூறினார்.