சீன மக்களின் ஒற்றுமை… கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வந்தது..!!

கொரோனா வைரஸ்  சீனாவில் கட்டுக்குள் வந்தது எப்படி.? சீனாவில்  வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் வேளையில், அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் இது எப்படி சாத்தியமானது என்று பார்க்கலாம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவத் தொடங்கியதும், சீனா கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி உஹான் மாகாணத்தில் முதல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. ஜனவரி 14ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் சீன அரசால் எடுக்க முடியவில்லை. தினமும் கொத்துக்கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டன.

அதிகபட்சமாக ஒரே நாளில் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி உயிரிழப்பு 150 ஆக இருந்தது. இது படிப்படியாக குறைந்து நிலையில் கடந்த 12ம் தேதி ஒற்றை எண்ணின் இலக்கில் உயிரிழப்பு பதிவானது. இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் 62 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

தொற்றும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை ஆராய்ந்த பொழுது, ஜனவரி மாதம் 23 ஆம் தேதி கொரோனோவால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 93 கோடி மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டனர்.

தினமும் பரிசோதனை விவரங்களை பகிரங்கமாக அறிவித்து செல்வது, அத்தியாவசிய பொருட்களை வாங்க ஒரு வீட்டிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவது, வீடுகளுக்கு உணவு, மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளை விநியோகிக்கும் பொறுப்பை பெருமளவில் ஓட்டுநர்கள் மட்டுமே செய்வது, உணவகங்களில் பாதுகாப்பு முறையில் தனி கேபின் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொலைத் தொடர்புத் துறையிலும் பெருமளவு கைகொடுத்தது. Health Code Assign என்ற திட்டத்தின் மூலம் மக்கள் நடமாட்டத்தை வெளியிட்டது. குறிப்பிட்ட பகுதியில் ஒரு நபர் எவ்வளவு நேரம் செலவிட்டிருக்கிறார் போன்ற தகவல்களை வெளியிட்டது. சில நிறுவனங்கள்FACIAL RECOGNITION TECHNOLOGY முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவருக்கு காய்ச்சல் இருக்கிறதா.? முக கவசம் அணிந்து இருக்கிறாரா.? என கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இருப்பவர்கள் பாதிப்பின் பொழுது  கடைபிடிக்க வேண்டியவற்றை மீறினால்  3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை போன்ற கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு அறிவித்தது. பொறுப்பற்ற முறையில் விதிகளை மீறுவோரை கண்டுபிடித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

சீன மக்களின் ஒருங்கிணைந்து உருவான அடக்குமுறையை ஆயிரக்கணக்கான மக்களை கொரோனா பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தற்காக, உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜென்ரல்  ரோச தானம் ரெட்ரோஸ் அதானம்  பாராட்டியுள்ளார். அரசின் கட்டுப்பாடுகளையும் மதித்து சரியான முறையில் நடந்து கொண்டுதான் கொரோனோவின்  கோரப்பிடியில் இருந்து தப்ப முடியும் என்பதை சீன மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.