சீனா : வீரர்கள் தடுப்பூசி போடலனா?…. இது கட்டாயம்…. ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு….!!!!

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கொரோனா தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கவுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சீன மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிகள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

அதாவது குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் போட்டிகள் நடைபெறவிருக்கும் மைதானத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி போட்டியாளர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தியிருந்தாலும் கூட கட்டாயமாக 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள் தடுப்பூசி செலுத்தவில்லையெனில் கட்டாயமாக 21 நாட்கள் சுய தனிமைபடுத்துதலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.