சீனாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா…. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை….!!!

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகத்து வருவதால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒரு பகுதியில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டதால் நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பூஜ்ய கொரோனா கொள்கையை கடைபிடிக்கும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஷாங்காய் நகரில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனைப் போலவே தலைநகர் பீஜிங்கில் சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நகரில் தினமும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பீஜிங்கில் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் பீஜிங்கின் பிரபல சந்தை, மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடம், பஸ் நிலையம், சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த இடங்கள் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியது, கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பஸ், ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிஜிங்கில் 190 பஸ் வழித்தடங்கள், 54 மெட்ரோ ரயில் நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிஜிங்கில் 12 மாவட் டத்தில் தினமும் ஆயிரக்கணக்கான கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பாங்ஷான் மாவட்டத்தில் பஸ், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாங்ஷான் மாவட்டத்தில் 13 இலட்சம் பேர் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் பிஜிங்கில் உள்ள பிரபல பிஜிங் பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அதிகரித்து வருவதால் சீன அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *