“சீனாவின் நன்னடத்தை பற்றி ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறோம்”… அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி பேச்சு…!!!!!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அமெரிக்காவில் பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தலைமை செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் தங்கள் நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரிகளை வரவேற்ற அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் பேசும் போது, தைவான் ஜல சந்தியில் சீனாவின் அதிகரித்து வரும் ஆக்ரோஷமான மற்றும் மிரட்டும் நடத்தை பற்றி நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா மந்திரி ரிச்சர்ட் மார்லஸ் பேசும் போது, சீனா தன்னை சுற்றி இருக்கும் உலகத்தை நாம் இதுவரை கண்டிடாத விதமாக வடிவமைக்க முயற்சி செய்து வருகிறது என கூறியுள்ளார்.

இதில் பசுபிக் தீவு நாடுகளில் தனது ராஜாங்க உறவுகளை தீவிர படுத்த அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பேசும் போது தைவான் ஜல சந்தி உட்பட ஆசியா முழுவதும் அமெரிக்கா அச்சமும் தயக்கமும் இல்லாமல் செயல்படும் என கூறியுள்ளார். மேலும் இந்த பகுதிகளில் சீனா செல்வாக்கை முறியடிக்க அமெரிக்கா தூதரக ரீதியில் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் பசிபிக் தீவு நாடுகளுக்கு 8 10 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அமெரிக்க அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.