சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதனால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதே போல் சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் சீனாவில் இருந்து புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவைப்படும் என பிரிட்டன் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஹூத்ரோ  விமான நிலையத்தில் பயணிகள் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால் அவர்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என அந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.