“சீட்டு பணம் 25 கோடி ரூபாயை மோசடி செய்த இருவர்”…. ஒருவர் போலீசிடம் சரண்…. போலீசார் விசாரணை….!!!!!

வேப்பனபள்ளி அருகே 25 கோடி ரூபாய் மோசடி செய்ததில் ஒருவர் சரண் அடைந்ததையடுத்து அவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் மாதேபள்ளி கிராமத்தில் முனிரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர்கள் மாத ஏலச் சீட்டு நடத்தி வந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவர்களிடம் சீட்டு போட்டு வந்த நிலையில் சென்ற மாதம் முனிரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி 25 கோடி அளவில் சீட்டு பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாகியதை தொடர்ந்து பணத்தை இழந்த 300-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில் சென்ற பதினைந்தாம் தேதி கிருஷ்ணமூர்த்தி ஈரோடு கோர்ட்டில் சரணடைந்தார். பின் அவரிடம் விசாரணை மேற்கொண்டதையடுத்து நேற்று முன்தினம் அவரின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், இரண்டு மோட்டார் சைக்கிள், பணம் என்னும் இயந்திரம், ஏடிஎம் இயந்திரங்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை போலீசார் கைபற்றி அவரிடம் விசாரணை செய்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *