சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் புதிய படம்…. இணையத்தில் லீக்கான படத்தின் கதை….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் நடித்த சூரரைப்போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்தது ரசிகர்களால் மிகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் தந்தை மகன் பாசத்தை உணர்த்தும் விதமாக அமையும் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மையுள்ளது என்பது தெரியவில்லை.