“சிவன் – நயன்தாரா திருமண வீடியோவை வெளியிட்ட நெட் பிக்ஸ் நிறுவனம்”….. வைரலாகும் ப்ரமோ…!!!!!!!!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் ஜூன் ஒன்பதாம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்களது திருமணத்தையும் பிரபல ஓடிடி  நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஒளிபரப்பு செய்வதாக கூறியிருந்தது.

இதன் பொறுப்பு  பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம்  ஒப்படைக்கப்பட்டது. இதனால் இவர்களது திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்க கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமண புகைப்படங்களை netflix நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் அவர்களது திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண வீடியோவின்  ப்ரமோ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இவர்களின் திருமண நிகழ்ச்சி வீடியோவின் ப்ரமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *