சிவகார்த்திகேயன் நடிப்பில் புது படம்…. வெளியான தகவல்…. குஷியில் ரசிகர்கள்…..!!!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டாக்டர் மற்றும் டான் ஆகிய 2 படங்களும் ரூபாய் 100 கோடி வசூல்செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த 2 திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் “பிரின்ஸ்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமன் இசை அமைக்கும் இந்த படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் ஆகஸ்ட் 31 விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தை அடுத்து சென்னை28, மங்காத்தா, மாநாடு ஆகிய பல்வேறு படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *