சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்”…. லீக்கான சண்டைக் காட்சிகள்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தை அடுத்து தற்போது டைரக்டர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் ப்படத்தில் நடித்து வருகிறார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்தில் டைரக்டர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் மாவீரன் படத்தில் கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்க யோகிபாபு, சரிதா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்போது இப்படத்திற்கான சூட்டிங் எண்ணூரில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பின் வீடியோ இணையத்தில் லீக்காகி இருக்கிறது. அவற்றில், இப்படத்தின் சண்டைக் காட்சிக்காக போடப்பட்டுள்ள செட்டில்கள் காட்சி இடம் பெற்றுள்ளது.