“சிவகார்த்திகேயனுடன் இணையும் மிஸ்கின்”….. அட என்னப்பா சொல்றீங்க….????

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்தநிலையில் மண்டேலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு “மாவீரன்” என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் படத்தின் முதற்கட்ட பணிகளுக்கான தொடக்க விழா வரும் எட்டாம் தேதி நடைபெற இருக்கின்றது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *