தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனியிடம் பிடித்துள்ளார். எந்தவொரு சினிமா பின்னணியும் இன்றி தன் முயற்சியால் சின்னத் திரையில் நுழைந்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். இவருடைய நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியாகயிருக்கிறது. இத்திரைப்படம் வருகிற ஜுலை 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் ஒருவருக்கு விபரீதம் ஏற்பட எந்த ஒரு சத்தமும் இன்றி அவருக்கு உதவி செய்த விஷயம் வெளியாகி உள்ளது.

இதனிடையே நடிகர் முனிஷ்காந்த் ஒரு பேட்டியில் கூறியதாவது, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படப்பிடிப்பில் டெக்னீஷியன் ஒருவர் மோசமான விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட சர்ஜரி செய்யப்பட்டதாம். மேலும் கிட்டத்தட்ட ரூ. 40 லட்சத்துக்கு மருத்துவ செலவு ஏற்பட்டது. அதற்கான மொத்த பணத்தையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டதற்கு பெரிய மனசு வேண்டும் என முனிஷ்காந்த் வியப்பாக கூறியுள்ளார்.