சிவகங்கை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில்… இவங்கதான் புதிதாக சேர்க்கப்பட்டவங்க… துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

சிவகங்கை மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் 5,238 பேர் கொண்ட துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. கடந்த 20-ஆம் தேதி சுருக்க திருத்தம் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 399 பெண் வாக்காளர்களும், 1 லட்சத்து 54 ஆயிரத்து 905 ஆண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 47 பேர் என மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரத்து 351 வாக்காளர்கள் இருந்தனர். சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 21 பெண் வாக்காளர்களும், 1 லட்சத்து 47 ஆயிரத்து 93 ஆண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 4 என மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 118 வாக்காளர்கள் இருந்தனர்.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 308 பெண் வாக்காளர்களும், 1 லட்சத்து 42 ஆயிரத்து 327 ஆண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 12 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 647 வாக்காளர்கள் இருந்தனர். மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 354 பெண் வாக்காளர்களும், 1 லட்சத்து 36 ஆயிரத்து 397 ஆண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 761 வாக்காளர்கள் இருந்தனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து ஆயிரத்து 82 பெண் வாக்காளர்களும், 5 லட்சத்து 80 ஆயிரத்து 722 ஆண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 73 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 81 ஆயிரத்து 877 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து விடுபட்டவர்கள் பெயர் மற்றும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி மனுக்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 904 பெண் வாக்காளர்கள், 780 ஆண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 1,685 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் 556 பெண் வாக்காளர்கள், 471 ஆண் வாக்காளர்கள் மொத்தம் 1,027 வாக்காளர்களும் உள்ளனர்.

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 820 பெண் வாக்காளர்கள், 695 ஆண் வாக்காளர்கள் மொத்தம் 1,515 வாக்காளர்களும், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 582 பெண் வாக்காளர்கள், 429 ஆண் வாக்காளர்கள் என மொத்தம் 1,011 வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்களாக 5 ஆயிரத்து 238 பேர் தற்போது வெளியிடப்பட்ட இணைப்பு வாக்காளர் பட்டியலின்படி சேர்க்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தற்போது வெளியிடப்பட்ட இணைப்பு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் 5,238 பேரையும் சேர்த்து மொத்தம் 11 லட்சத்து 87 ஆயிரத்து 115 ஆக உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.