புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமியை காணவில்லை என அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரன்ஸ் (19) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இவர் சிறுமியுடன் சமூக வலைதளம் மூலம் பழகி திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் லாரன்ஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.