சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

கல்லூரி மாணவியை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் வழுதரெட்டியை சேர்ந்த சக்தி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மனைவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியையும், சக்தியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *