மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பாலாஜி (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கியுள்ளார். இவரை ஆட்டோ ஓட்டுநர்களான ஆதித்யா ஷிண்டே மற்றும் தினேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்துவிட்டார். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் ஆதித்யா ஷிண்டே மற்றும் தினேஷ் ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.

அதாவது பாலாஜி அந்த சிறுமியை காதலித்து வந்ததாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் சிறுமி மன வேதனைக்கு ஆளானார். இதனால அந்த சிறுமியின் தாய் ரேகா பாலாஜியை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 17ஆம் தேதி சிறுமியின் வீட்டிற்கு பாலாஜி செல்ல தன்னுடைய கூட்டாளிகளான தினேஷ் மற்றும் ஷிண்டே உட்பட 4 பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அவர்கள் இரும்பு கம்பியால் அடித்து வாலிபரை கொலை செய்த நிலையில் பின்னர் விபத்தில் சிக்கியதாக கூறி நாடகமாடியுள்ளனர். மேலும் இது தொடர்பாக சிறுமியின் தாய் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் வழக்கில் தொடர்புடைய பிறரை தேடி வருகிறார்கள்.