சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாடகர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

அரியானா மாநிலம் குரு கிராம் நகரில் போஜ்புரி பாடகர் அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவரை instagram, youtube போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை இவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பதிவு செய்த போலீசார் பாடகர் அபிஷேக்கை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடத்திய போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் நகர் பகுதியில் அபிஷேக் வசித்து வந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் வசித்து வந்த 13 வயது சிறுமியுடன் நட்பாக பழகுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் அபிஷேக்கிடமிருந்து விலகிய சிறுமி இது குறித்து தனது வீட்டில் யாரிடமும் கூறவில்லை. தற்போது சிறுமியின்  அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் சிறுமியை பாலில் வன்கொடுமை செய்த பாடகர் அபிஷேக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.