சிறுமியிடம் சில்மிஷம்: அடித்துக் கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!!

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் பகுதியில் கிருஷ்ணன் என்பவரின் மகன் கோபால் (50) வசித்து வருகிறார். பெயிண்டர் தொழில் செய்து வரும் அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபால் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள்,வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய கோபாலை அழைத்து பேசி உள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் இரண்டு பேர் கோபாலை சரமாரியாக தாக்கினார்கள். அதில் ஒரு பெண் கம்பால் தாக்கிய நிலையில்,அவருடன் வந்திருந்த ஆண் கோபாலை கீழே தள்ளி அவரை தலையில் கல்லால் தாக்கினார். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபாலை தொடர்ந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *