சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்…. கலெக்டருக்கு கிடைத்த தகவல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

15 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோகனூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியனுக்கு தகவல் கிடைத்துள்ளது, அந்த தகவலின் படி உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் தாசில்தார் பழனி ராஜன் ஆகியோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமிக்கும், 31 வயதுடைய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது உறுதியானது.

இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்யக்கூடாது என சிறுமியின் பெற்றோரிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனை மீறி சிறுமிக்கு திருமணம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *