சிறுமிக்கும் பாதுகாப்பு இல்ல…. முதியவர் செய்த காரியம்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மொளசி பகுதியில் வெங்கடாஜலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்குப்பின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பக்கத்து வீட்டு பெண் உடனடியாக சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வெங்கடாஜலத்தை திருச்செங்கோடு அழைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *