கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் பகுதி உள்ளது. இங்கு தாசன் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தாசன் தன்னுடைய கடைக்கு வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமிகள் தன்னுடைய பெற்றோரிடம் கூறிய நிலையில் தாசன் மீது அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் படி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தாசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வெளியானது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட தாசனுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ.40,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு வருடம் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.