சிறப்பு வாய்ந்த கோவிலில் சின்னம்மா…. அமோக வரவேற்பு கொடுத்த அ.ம.மு.க வேட்பாளர்கள்…. காஞ்சியில் சுவாமி தரிசனம்….!!

காஞ்சிபுரத்தில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் அரசியல் களத்திலிருந்து ஒதுக்குவதாக அறிக்கை விடுத்த சின்னம்மா அனைத்து கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது காஞ்சி காமாட்சி அம்மனை தரிசிக்க அவர் நேரில் வந்தார். அப்போது சின்னமாவிற்கு அ.ம.மு.க வேட்பாளர்கள் அனைவரும் பூங்கொத்து கொடுத்து, பட்டாடை அணிவித்து சிறப்பாக வரவேற்றனர். இதனையடுத்து சின்னம்மாவுக்கு கோவிலில் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.