சிறப்பு வகுப்புக்கு சென்று வந்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் மடுவின்கரை பகுதியில் ஜனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்ற விஷ்வா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் விஷ்வாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அவர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஷ்வாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷ்வா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *