அண்மை காலமாக நடிகைகள் பலரும் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்வதையும், சாமியார்களை சந்திப்பதையும், ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்படுவதையும் வழக்கமாக வைத்து இருக்கின்றனர். பட வாய்ப்புகளுக்காகவும், நல்ல கணவன் அமையவும் இதை செய்வதாக பட உலகினர் சொல்கின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவிலுள்ள பிரபல ஜோதிடர் ஒருவரை வைத்து நடிகை நிதி அகர்வால் சிறப்பு பூஜை மற்றும் யாகங்கள் செய்து உள்ளார். முன்னணி நடிகைகள் மாதிரி எனக்கும் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு பூஜையை அவர் செய்ததாக சொல்லப்படுகிறது. நிதி அகர்வால் தமிழில் ஈஸ்வரன், பூமி, கலகத் தலைவன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.