பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க… மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா…!!

சேலம் மாவட்டத்தில் சென்றாய பெருமாள் கோவிலில் உத்திர திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ராக்கிபட்டி பகுதியில் சென்றாய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது சாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன் பின் சுவாமி தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அந்த தேரோட்டத்தில்  திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துள்ளனர். மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள வீதிகளில் வழியாக சென்று மீண்டும் தேர்  கோவிலை  வந்தடைந்துள்ளது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.