உருளு தண்டம் போட்டு நேர்த்திக்கடன்…. மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சேலம் மாவட்டத்தில் மாரியம்மன்- காளியம்மன் கோவில்  திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவிலில் திருவிழா நடைப்பெற்றுள்ளது. அப்போது திருவிழாவில் பக்தர்கள் உருளு தண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இதனையடுத்து அம்மன் அழைப்பு, பொங்கல் வைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான  தேரோட்டமானது  காடையாம்பட்டி பிரிவு ரோட்டிலிருந்து ஆரம்பித்து இளம்பிள்ளை நகரை சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்துள்ளது. இந்த தேரோட்டதில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துள்ளனர். மேலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.