இப்போதான் நிம்மதியா இருக்கு… நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்… கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…!!

நல்லங்கியூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள நல்லங்கியூர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 18-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இதனையடுத்து  தினமும் அம்மனுக்கு  பல்வேறு பொருட்களால் சிறப்பு பூஜைகள் செய்து விரதம் இருந்தும் பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து அம்மனுக்கு தீர்த்தக்குடம்  எடுத்து வரும்போது  பகதர்கள் சிலர் எலுமிச்சை அலகு, வேல் அலகு குத்தி அங்காளம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக நல்லங்கியூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில்  நல்லங்கியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த  பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.