சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி ஜோடியாக நடித்துள்ள “மாமனிதன்” திரைப்படம் சென்ற மே மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இவற்றில் ஜோக்கர் திரைப்படம் வாயிலாக பிரபலமான குருசோமசுந்தரமும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. அண்மையில் ஈரான் நாட்டிலுள்ள அபதான் என்ற தீவில் இருக்கும் மூவிங் திரைப்பட கல்லூரி திரைப்பட விழாவில் மாமனிதன் திரையிடப்பட்டு விஜய் சேதுபதிக்கு 2022ம் வருடத்துக்கான சிறந்த நடிகர் என்ற விருதை வழங்கி கவுரவித்தனர்.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன், கார்கி, இரவின் நிழல், விசித்திரன் உட்பட பல தமிழ் படங்கள் திரையிடப்பட்டது. இவற்றில் மாமனிதன் படத்தில் நடித்திருக்கும் காயத்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் 2 குழந்தைகளின் தாயாக யதார்த்தமாக அவர் நடித்திருந்தார். அதன்பின் விருது பெற்ற காயத்ரிக்கு இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.