சியோமியின்  ‘ரெட்மி டி.வி  70-இன்ச்’ … சீனாவில் அதிரடி விற்பனை ஆரம்பம் ..!!

சியோமி நிறுவனம் தனது புதிய ‘ரெட்மி டி.வி  70-இன்ச்’  டிவியை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் சீனாவின் பீஜிங் நகரில் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுக விழாவில் ரெட்மி டிவி மட்டுமின்றி ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த  சியோமி  டி.வி  70-இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி  டி.விக்கு ‘ரெட்மி டி.வி  70-இன்ச்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Image result for 'ரெட்மி டி.வி 70-இன்ச்'

இந்த சியோமி டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த டிவி சீனாவில் வரும் செப்டம்பர் 3-ல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த டிவி விலை ரூ.38,000 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் , தற்போது சீனாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த டிவி, சர்வதேச அளவில் வெளியாவது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த ரெட்மி டிவி 70-இன்ச் 4கே திரை, ஹெச்.டி.ஆர் வசதியும், சுவற்றில் மாட்டுவது மற்றும்  டேபிள் மீது வைப்பது என இரண்டு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது.

Image result for 'ரெட்மி டி.வி 70-இன்ச்'

இந்த ரெட்மி டிவி சியோமியின் பேட்ச்வால் தளத்தை கொண்டுள்ளது. இந்த டிவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ரேம்  சேமிப்புடன், குவாட்-கோர் 64-பிட் அம்லாஜிக் எஸ்.ஓ.சி ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது. மேலும் , இதில் வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு யூ.எஸ்.பி. போர்ட்கள், மூன்று ஹெச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஏவி இன்புட் என பல இணைப்பு வசதிகளை கொண்டுள்ளது. இந்த ரெட்மி டிவியுடன் ப்ளூடூத் மூலம் இயங்கும் வாய்ஸ் ரிமோட்டையும் சியோமி நிறுவனம் அளித்துள்ளது.

 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *