சிம்மம் ராசிக்கு.. வாக்குறுதிகள் யாருக்கும் கொடுக்காதீர்கள்.. வெற்றி காண்பது சற்று கடினம்தான்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பது என்பது கொஞ்சம் கஷ்டம். இன்று ருசியான உணவுகள் கிடைப்பதற்கு கடினமாக இருக்கும். சுகம் என்பது தேட வேண்டிய விஷயமாக இருக்கும் கூடுமானவரை இன்று பொறுமையாக இருக்கவேண்டும். தனலாபம் ஓரளவுதான் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் சிறுசிறு தொல்லைகள் அடையக்கூடும். தேவையற்ற வீண் பேச்சுகளை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். மாணவர்கள் இன்று சற்று கவனமுடன் பாடங்களை படிக்க வேண்டும்.

படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப் பார்ப்பது ரொம்ப நல்லது. இன்று கூடுமானவரை ஆலயம் சென்று காரியத்தை தொடங்கினாள் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதே போல காரியங்களை செய்யும் பொழுது திட்டமிட்டு செய்வது ரொம்ப நல்லது. இன்று பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கையாள வேண்டும். யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்யாமல் இருங்கள். கோபப்படாமல் இருங்கள். கோபத்தை கூடுமானவரை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல உங்களுடைய விதி மேலாண்மையிலும் கவனம் இருக்கட்டும். யாரிடமும் இன்று பணம் கடன் வாங்க வேண்டாம். கொஞ்சம் பொறுமையாகவே இன்றைய நாளை கடப்பது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலம் மஞ்சள் நிறம்