சிம்மம் ராசிக்கு…திருமண சுபகாரியங்கள் கைகூடும்… சிந்தனை திறன் மேலோங்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாளாகவே இருக்கும். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த முயற்சி இப்பொழுது நல்ல வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும்.

உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ள முடியும். இன்று  முயற்சியின் பேரிலேயே அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்கிறீர்கள். உங்களுடைய நிதி மேலாண்மையும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல், வாங்கல்கள் நல்லபடியாகவே இருக்கும். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் முன்னேற்றம் இருக்கும். நட்பு மத்தியில் அவர்கள் கௌரவிக்கப் படுவார்கள் சக மாணவரிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். தேர்வு முடியும் வரை படத்தில் மட்டும் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் எப்பொழுதுமே கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட்டமான திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்