சிம்மம் ராசிக்கு… உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.. அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உயர் அதிகாரிகளினால் உதவிகள் கிடைக்கும் நாளாகவே இருக்கும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நாட்டுப்பற்று மிக்க அவர்களின் ஆதரவால் வீட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். இன்று அரசியல்வாதிகள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே பதவியை காப்பாற்றிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய கடுமையாக பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணங்களும் செல்ல நேரிடும். இன்று  பயணத்தின் பொழுது ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். அதே போல உடமைகளை மீதும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கொடுக்கல் வாங்கல்களில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செய்வது ரொம்ப நல்லது. பண பரிவர்த்தனையில் கவனமாக இருங்கள், கோபத்தை இன்று குறைத்துக் கொண்டாலே இன்றைய நாள் உங்கள் வசம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிக அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்