“சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான்”…. படத்தின் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த இயக்குனர்…!!!!

இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி டான் திரைப்படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் டான். இத்திரைப்படமானது வருகின்ற 13ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பேட்டியளித்துள்ளார். அப்போது படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ரோல் நல்லவரும் இல்லை கெட்டவனும் இல்லை.

படத்தில் சமூகத்திற்கு தேவையான சோசியல் மெசேஜ் இருக்கின்றது. சிவகார்த்திகேயனின் கதாபாத்திரமானது வாத்தியாரிடம் வம்பிழுக்கும் மாணவனாக இருப்பார். சிவாங்கி குழந்தை தனத்துடன் அவராகவே நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் சிகரெட் குடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற தப்பான விஷயங்கள் எதுவும் இருக்காது. டான் திரைப்படம் உங்கள் வாழ்க்கையை ரீவிஸிட் செய்வது போல இருக்கும் நல்ல படம் என கூறியுள்ளார்.