சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களே!…. மறுமதிப்பீட்டுக்கு அப்ளை பண்ணனுமா?…. இதோ முழு விபரம்…..!!!!!!

மத்திய கல்வி வாரியம் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வுக்கு பதில் 2 பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்தது. அதன்படி சென்ற 2021ஆம் வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10, 12ஆம் வகுப்புமாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. CBSE 10ஆம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு முடிவுகள் சென்ற 2 வாரங்களுக்கு முன் வெளியாகியது. இதையடுத்து 12ஆம் வகுப்பு தேர்வமுடிவுகளானது எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு பயனாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடந்த சனிக்கிழமை அன்று CBSE 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ஆகவே ஆன்லைனில் வெளியிடப்பட்ட முடிவுகளை மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் CBSE, cbse.gov.in (அல்லது) cbseresults.nic.in-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை உடனே சரிபார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் CBSE 12ஆம் வகுப்பு முதல் பருவத்தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் cbse.gov.in இணையதளத்தில் மறுமதிப்பீட்டிற்க்கு விண்ணப்பிக்க மார்ச் 31 2022 கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

# பள்ளிகள் CBSE- cbse.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடவும்.

# இணையதளத்தில் தீர்மானத்திற்கான பள்ளிக் கோரிக்கை சமர்ப்பிப்பு (டெர்ம்-I தேர்வு முடிவு-2022) என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

# தேவையான உள்நுழைவு சான்றுகளை நிரப்ப வேண்டும்.

# பின் தகவலை உள்ளிட்டு CBSE முடிவு மறுமதிப்பீட்டு கோரிக்கைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

# உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கம் செய்து எதிர்காலக் குறிப்புக்காக PRINT எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான 2ம் பருவத்துக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10 ஆம் வகுப்பு CBSE பொதுத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி மே 24 ஆம் தேதி முடிவடைகிறது. 12 ஆம் வகுப்புகளுக்கான 2 பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி புதன்கிழமை நிறைவடைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *