“சிபிஎஸ்இ” ஜனநாயகம் மற்றும் உலகமயமாக்கலின் தாக்கம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிபிஎஸ்இ வகுப்புகளின் சில பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ நிர்வாகம் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்து சிலவற்றை நீக்கியுள்ளது. அதாவது தொழிற்புரட்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, ஆப்பிரிக்க- ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் வளர்ச்சி, பனிப்போர் யுகம், அணிசேரா இயக்கம் போன்ற பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 10-ம் வகுப்பு பாடத்திட்டத்திலும் சில நீக்கப்பட்டுள்ளது.

அதாவது மதசார்பற்ற அரசு பிரிவிலிருந்து உருது கவிஞர் பைஸ் அகமது, பைஸ் அகமதின் 3-ம் கவிதைகள், வகுப்புவாதம், விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் போன்ற பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய பாடத்திட்டங்களும் நீக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டங்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் நீக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் நீக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்தும் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *