சின்ன சின்ன விஷயத்தை பெருசா ஆக்காதீங்க…. அதிமுகவை சீண்டிய எச்.ராஜா …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற தலைவர் கட்சி என்று இருக்கலாம். சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் பெரிய விஷயமாக பண்ணாதிங்க, சட்டமன்ற கட்சித் தலைவர். இன்றைக்கு எதிர்க்கட்சியாக மிக உயர்ந்த குரல் கொடுத்து கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதனால் யாரவது செய்திருக்கலாம்.

உயர்நீதிமன்றம் எங்கே இருக்கிறது, நான் ஒன்றும் பொய் சொல்லவில்லையே. விழுப்புரம் பேருந்து நிலையம், புதுக்கோட்டை பேருந்து நிலையம் எல்லாம் எதுல இருக்கு,  நான் திமுக, அதிமுக என்று பிரித்து பார்க்க விரும்பல, இந்த 54 வருஷம் பொறுப்பற்ற ஒரு ஆட்சி முறை. நான் இன்னும் கடுமையான வார்த்தை பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால் 67க்கு முன்னாடி அண்ணாதுரை, கருணாநிதி இவர்களைப்பற்றி எல்லாம் எங்க ஊரு கண்ணதாசன் எழுதிய புத்தகத்தில் பார்த்தீர்கள் என்றால்….  இவர்கள் எங்கே இருந்தார்கள் ? என்ன செய்துகொண்டிருந்தார்கள் ? எல்லாமே பொறுப்பற்றது, அதனால் சொல்லி இருக்கிறேன். உங்க வார்த்தை எனக்கு போடாதீர்கள். நான் தெளிவாக கூறி விட்டேன் 67லிலிருந்து அவ்வளவுதான், உங்களுக்கு புரியும். உங்களுக்கு புரிந்தபடி எழுதுங்க என தெரிவித்தார். இதன் மூலம் அதிமுகவையும் மறைமுகமாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *