சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி சீரியல் கதாநாயகனாக நடித்த அர்ணவை இரண்டு வருடத்திற்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு பல்வேறு சிக்கல்கள் வந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது திவ்யாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் திவ்யாவின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 59 வயதான இவருடைய தாயார் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் காலமானார். இதனைத் தொடர்ந்து திவ்யாவுக்கு சின்னத்திரை வட்டாரங்கள் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.